முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாள்

342

பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு முள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்தை மேற்கொண்டனர் இப்போராட்டமானது பிரித்தானிய பாராளுமன்ற திடலில் கண்டனப் போராட்டமாக ஆரம்பித்து மிகப் பெரும் போரணியாக பிரித்தானிய பிரதமரின் வதிவிடம் நோக்கிச் சென்றது. இப்போராட்டமும் பேரணியும் பிரித்தானிய மக்களையும் ஏனைய பல்லாயிரக்கணக்கான அனைத்துலக மக்களையும் உற்று நோக்கும் வகையில் அமையப் பெற்றது.16ம் ஆண்டை நினைவு கூரும் வகையில் பிரித்தானியாவின் பிரதான வீதி வழியாக தமிழின அழிப்பை சித்தரிக்கும் காட்சிப்பதிவுகளைத் தாங்கிய ஒளித்திரை ஊர்தியானது பலமணி நேரங்களாக பரப்புரையில் ஈடுபடுத்தப்பட்டதும் சிறிலங்காவின் முகத்திரையானது சர்வதேச அரங்கில் தோலுரித்துக் காட்டப்பட்டது. தொடர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தமிழின அழிப்பிற்கான
அனைத்துலக நீதியையும் வலியுறுத்திய
மனு பிரித்தானிய பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில், பிரித்தானிய தேசியக்கொடியை டொமிபில்லா ராஜநாயகம் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக்கொடியை யாதவி தயாளபவன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

மேனகா சுரெஷ் நினைவு சுடரினை ஏற்றிவைத்தார். இதையடுத்து நினைவு தூபிக்கு யதுசன் ஜெயக்குமார் அவர்கள் மலர் மாலை அணிவித்தார்கள். தொடர்ந்து நினைவு தூபிக்கு மலர் வணக்கமும் தீபவணக்கமும் இடம்பெற்றன.

நிகழ்வில் கவிதைகள், உரைகளும், முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் பகிர்வுகளும் இடம்பெற்றன. நம்பிக்கையின் வடிவமாக இருக்க கூடிய “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”என்ற பாடல் ஒலிக்கப்பட்டதிற்க்கு பின்னர் , தமிழீழ தேசியக் கொடியும் பிரித்தானிய தேசியக் கொடியும் கையேந்தப்பட்டது.

“ஈழம் கிடைக்கும் வரை பயணிப்போம்” என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவுபெற்றது. இறுதியாக, கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. 

Previous articleதமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு மே 18 அன்று நிகழ்ந்த பேரவலங்களை ஒளிவடிவில் பிரதிபலித்துகொண்டு பிரச்சார ஊர்தியானது லண்டன் மாநகரில் ஊர்வலமாக சென்றது கொண்டு இருக்கின்றது
Next articleTRO தமிழர் விளையாட்டு விழா 2025