பொங்கல் விழா 2024

240

‟தைப் பொங்கல் திருநாள் இது இயற்கையைப் போற்றி வாழ்ந்த தமிழருடைய உயர்ந்த சிந்தனையில் உருவாகிய நாளாகும். இந்நாளே தமிழருடைய புத்தாண்டு நாளும் ஆகும்.

பொங்கல் விழாவானது பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் கலை பண்பாட்டுக் கழகத்தினரினால் வேலிங்டன் மகளிர் பாடசாலையில் நடைபெற்றது.

ராதா கலைப்பள்ளி ஆசிரியை விஜயராணி கிருஷ்ணராஜா மற்றும் வல்வை கலைக்கோயில் ஆசிரியை சுகிர்தா ஆனந்த் ஆகியோர் பொதுசுடரினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.

தமிழீழ தேசியக்கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர் திரு கண்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

அகவணக்கத்தினை தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன . ஆசிரியை சாமினி கண்ணன் அவர்களின் நெறியாள்கையில் நாட்டியாலயா நடனப்பள்ளி மாணவிகளின் கிராமிய நடனம் ஆசிரியர் சுகிர்தா ஆனந்த் அவர்களின் நெறியாள்கையில் வல்வைக் கலைக்கோயில் நடனப்பள்ளி மாணவிகளின் நடனம் ஆசிரியை ராஜினி ராஜகோபால் அவர்களின் நெறியாள்கையில் நாட்டியாலயா நடனப்பள்ளி மாணவிகளின் ஆகியோர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கலை பண்பாட்டுக்கழகத்தினருடன் இணைந்து பணியாற்றி வருபவரும் நாட்டியாலயா நடனப்பள்ளி ஆசிரியையுமான ராஜினி ராஜகோபால் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.

மிருணா நிமலதாஷன் மற்றும் சாய் வர்ஷா கமலராஜா ஆகியோருடைய சிற்றுரை இடம்பெற்றது. அனிஷ் தயாளன் அவர்கள் புல்லாங்குழல் இசையினை வழங்கியிருந்தார்கள்.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி கையேந்தலுடன் தமிழீழம் கிடைக்கும் வரை பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வானது நிறைவடைந்தது.

Previous articleதன்னாட்சிக்கான உரிமைக்குரல்
Next articleகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 31ம் ஆண்டு வீர வணக்க நிகழ்ச்சி