கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன,
கண்ணீர்த் துளிகள் விழுகின்றன!
நினைவுச் சுடர்கள் ஒளிர்கின்றன,
நெஞ்சங்கள் மௌனத்தில் கனக்கின்றன!
காலம் கடந்தும் கரையாத நினைவுகள்,
தேசங்கள் கடந்தும் தொடரும் உறவுகள்!
நவம்பர் இருபத்தேழு —
தமிழர் நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்த நாள்!
இது எங்கள் மாவீரர் நாள்2026 ம் ஆண்டுக்கான ஈகைச்சுடரினை லண்டன் எக்ஸல் மண்டபத்தில் கண்ணி வெடிப் பிரிவின் பொறுப்பாளர் லெப்டினன் கெணல் கோபி மாஸ்டர் அவர்களின் மகள் செல்வி டிலாணி கோபி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.





























































