கார்த்திகைக் காற்றில் கலந்துவிட்ட கண்ணீரின் கதைகள் ஆயிரம்!
மண்ணோடு மறைந்த உறவுகளை மனம் தேடும் தருணம் இன்றும்!
விழிகளில் கண்ணீர் வழிந்தாலும்விடியலைத் தேடும் எம் தேசம்!
தலைமுறைகள் கடந்தாலும்தொடர்ந்திடும் நினைவுகளின் நேசம்! தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2026– பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்வுகள் லண்டன் எக்ஷல் மண்டபத்தில்ஆரம்பமாகி உள்ளது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தென் கிழக்கு பிராந்திய நீண்டகால செயற்பாட்டாளர் திரு சதாசிவம் ஆனந்தகுமார் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.
பிரித்தானிய தேசியக்கொடியினை தமிழ் இளையோர் பொறுப்பாளர் செல்வி டென்சியா நியூட்டன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் துனைப் பொறுப்பாளரும் அனைத்துலக தொடர்பகத்தின் மகளிர் அணி பொறுப்பளரும் முன்னால் சிறுத்தை படையணியின் தளபதியுமான திருமதி ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தேசியத்தலைவரின் சிந்தனை வரிகளோடு ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை ஏற்ற காத்திருக்கிறார்கள்.
















