தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

149

தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தேசத்தின் குரல் பாலா அண்ணா (கலாநிதி அன்ரன் பாலசிங்கம்) அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி, 15/12/2024 ஞாயிற்றுகிழமை காலை 9மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் கொவன்றி AT7 உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை கொவன்றி விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு. சகாசன் மற்றும் உறுப்பினர்கள் திரு. மோகன் திரு. இளங்கோ ஆகியோர் ஏற்றிவைத்தனர். பிரித்தானிய தேசியக்கொடியை வெளிமாநில ஒருங்கிணைப்பாளர் திரு நவம் ஏற்றி வைக்க தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விளையாட்டுத்துறை உதயணன் ஏற்றி வைத்தார்.
கரும்புலி லெப்டினன்ட் இசைச் செல்வனின் உறவினர் திரு. குட்டி ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.
பாலா அண்ணாவுக்கான மலர்வணக்கத்தைத் தொடர்ந்து கரப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகியது. இருபத்தியிரண்டு (22) விளையாட்டு கழகங்கள் போட்டிகளில் பங்கெடுத்தனர்.

Previous articleமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு 2024
Next articleபெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் வெலிங்டன் பகுதியில் இடம்பெற்றது