திலீபன் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக லண்டனில் இன்று போராட்டம்!

11

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவாலயத்தில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்டிருந்த அவரது சிலை இலங்கை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (03.10.2026) லண்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திலீபனின் 39ஆவது நினைவேந்தலை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி நல்லூரிலுள்ள நினைவிடத்தில் சிலை வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று, செப்டம்பர் 26ஆம் திகதி இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. மறுநாளான செப்டம்பர் 27ஆம் திகதி பொலிஸார் குறித்த சிலையை அங்கிருந்து அகற்றி எடுத்துச் சென்றனர்.

சிலை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றதுடன், தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் இன்று லண்டனில் ஒன்று கூடி போராட்டத்தினை முன்னேடுத்திருந்தார்கள். பிற்பகல் 3 மணி தொடக்கம் 10 Downing Street பகுதியில் ஆரம்பித்து, Foreign, Commonwealth & Development Office (FCDO) நோக்கி முன்னெடுக்கப்பட்டது .

Previous articleமாபெரும் மக்கள் போராட்ட அழைப்பு