ஐ. நா. நோக்கிய மனித நேய மிதியுந்துப்பயணம்.

285

மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மிதியுந்துப்பயணம் ஆரம்பமானது.

இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய பிரதமர் வதிவிடமான No 10 Downing Street முன்பாக ஆரம்பமானது. ஈகைச்சுடரினை வடமேற்கு இலண்டன் பிராந்திய மகளிர் பொறுப்பாளர் திருமதி வசந்தகுமாரி சிவசூரியன் அவர்கள் ஏற்றிவைக்க, அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் ஐ.நா. நோக்கிய மிதியுந்துப்பயணமானது தொடர்ந்து Conservative Party, Labour Party அலுவலகங்களில் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு மனு கையளிக்கப்பட்டது. அதனையடுத்து, எமது நீதிக்காய் காத்திரமான பங்களிப்பை வலியுறுத்தியவாறு இப்பயணமானது, Labour கட்சியின் Morden பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh MP சந்திப்பை தொடர்ந்து மனுவும் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக 06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.









Previous articleஈகையர் வணக்க நிகழ்வு
Next articleதமிழ் மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி