தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனிலிருந்து ஜெனீவா வரை நடைபெற்ற சைக்கிள் பேரணி

10

தமிழ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், சுதந்திர தமிழீழத்திற்கான கோரிக்கையை முன்வைத்தும், லண்டனிலிருந்து ஜெனீவா வரை நடைபெற்ற சைக்கிள் பேரணி 26 ஆகஸ்ட் 2026 அன்று லண்டனில் ஆரம்பமானது.

லண்டனில் தொடங்கிய இந்த சைக்கிள் பயணம் நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளைக் கடந்து பயணித்தது.

பல நாட்கள் தொடர்ந்த இந்தப் பயணம், 14 செப்டம்பர் 2026 அன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நிறைவடையும்.

பேரணியின் ஊடாக, தமிழ் இனப்படுகொலை தொடர்பான நீதி கோரிக்கை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி வலியுறுத்தப்பட்டது.

“16 Years – 32 Rallies – One Goal” என்ற வாசகத்துடன் நடைபெற்ற இந்தப் பேரணியை Council of Eelam Tamils – UK, Tamil Youth Organisation – United Kingdom மற்றும் Tamils Coordinating Committee (UK) ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்ததாக நிகழ்வினை முன்னேடுத்திருந்தார்கள்.

Previous articleஇலண்டனில் கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி ஆர்ப்பாட்டம்
Next articleமாபெரும் மகளிர் விளையாட்டு விழா