தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ஸ்கொட்லாந்து

276

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ஸ்கொட்லாந்து கிளாஸ்க்கோ நகரில் உள்ள
Royal Oak மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பமாக ‘லெப்டின்ன்’ வேங்கைத்தமிழ் அவர்களின் சகோதரன் விக்னேஸ்வரன் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்

தொடர்ந்து ஸ்கொட்லாந்து தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஸ்கொட்லாந்து துணைப் பொறுப்பாளர் ரவீந்திரன் அவர்களும்

தமிழீழ தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஸ்கொட்லாந்து பொறுப்பாளர் ஜெயக்குமார் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

ஈகைச்சுடரினை முரளி அவர்கள் ஏற்றிவைத்தார்

தொடர்ந்து கலை நிகழ்வுகளோடு சிறப்பாக நடைபெற்றது

நிகழ்வுகளை அயரின், எல்க்கா ஆகியோர் அறிவிப்பாளர்களாக மேடையில் தொகுத்து வழங்க எழுச்சிப் பாடல்கள் கவிதை என பல நிகழ்வுகளை த் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எமது உறுதிப் பாடலோடு தேசியக் கொடிகள் கையேந்தலுடன் எழுச்சியாக நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

Previous articleதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 – நிகழ்வுகள்.
Next articleதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டு வணக்க நிகழ்வு