தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 – நிகழ்வுகள்.

344

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ஆண்டின் நிகழ்வுகளில் தொடக்கமாக பாராளுமன்ற உறுப்பினர்களான Harrow east பகுதியை சார்ந்த Bob Blackman , Carshalton and Wallington பகுதியை சார்ந்தவரும் தமிழ் மக்களுக்கானன அனைத்துக்கட்ச்சி பாராளுமன்ற தலைவருமான Elliot colburn மற்றும்  Kingston and surbiton பகுதியை சார்ந்த Helen Edward அவர்களுடைய உரையும் இடம் பெற்றது. மாவீரர் கானங்களும் மற்றும் கவிதைகளை தொடர்ந்த்து தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் யாதவி தயாளபவன் அவர்களின் உரை , மக்களவை உறுப்பினர் திருமதி அஞ்சலி மற்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டளர் திரு நியூட்டன் ஆகியொருடைய உரை இடம் பெற்றது. திருமதி ஞானராணி சிவனேசகுமார்  அவர்களின் நெறியாள்கையில்” ஒரு குரல் ” மற்றும்  ” The youth uprising ” தமிழ் இளையோர் அமைப்பு ஆகியோருடைய நாடகம் இடம் பெற்றது.  நடன ஆசிரியை திருமதி ராகினி ராஜகோபால் , நடன ஆசிரியை திருமதி. சுகிர்தா ஆனந்த் , நடன ஆசிரியைதிருமதி தர்சினி சிவதீஷ் மற்றும்  நடன ஆசிரியை திருமதி ஷாமினி கண்ணன் ஆகியோரின் நெறியாள்கையில் அவர்களுடைய மாணவர்களுடைய குழு நடனங்கள் இடம்பெற்றன.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட ஓவிய போட்டியில் பிரித்தானியா வாழ் மாணவர்கள் தமிழ்ப் பாடசாலைகள் ஊடாக பங்குபற்றி இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வெரு பிரிவிலும் சிறந்த இரண்டு ஓவியங்களுக்கு நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் மாவீரர் நினைவு நாளில் வழங்கப்பட்டது.

நம்பிக்கையின் வடிவமாக இருக்க கூடிய நம்புங்கள் தமிழீழ நாளை பிறக்கும் என்கின்ற பாடலோடு தேசிய கொடிகள் கையேந்தப்பட்டு நிகழ்வானது நிறைவு பெற்றது.

 

 

Previous articleதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ம் ஆண்டின் ஈகைச்சுடர்
Next articleதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ஸ்கொட்லாந்து