மே 18 , தமிழின அழிப்பின் உச்சம். நினைவு வணக்க நிகழ்வு 2024

505

மறைக்கவோ ,மறுக்கவோ
மறக்கவோ முடியாத
நினைவு நாள் …!

இன்று 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது.
தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதத்தினை
தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்களால்
பிரதமர் அலுவலகத்தில் கையளித்தார்கள்.
தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இணைந்து கொட்டொலிகள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பமான நீதிக்கான போராட்டமானது பேரணியாக வெளிவிவகார அமைச்சகம் முன்பாக சென்று பிரதமர் வதிவிடம் முன்பாக நிகழ்வானது ஆரம்பமானது.
பொதுச்சுடரினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு கலை பண்பாட்டுக்கழக செயற்பாட்டாளர் திரு அனுரா அவர்கள் ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடி தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் திருமதி பாப்ரா ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தமிழீழ தேசியக்கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு நியூட்டன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
மாவீரர் சுடர்த்தமிழ் அவர்களின் தாயார் திருமதி ரஞ்சினி பாலச்சந்திரன் அவர்கள் நினைவு சுடரினை ஏற்றிவைத்தார்கள்.அகவணக்கத்தினை தொடர்ந்து
நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு
மலர் வணக்கமும் தீப வணக்கமும் இடம்பெற்றது.

நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவழியா கவிதையினை தமிழில் திருமதி தேவிகா அனுரா அவர்களும் ஆங்கிலத்தில் கவிதையினை இனுசிக்கா இதயராஜா அவர்களும் வழங்கினார்கள்.

நடன ஆசிரியர் திருமதி சுகிர்தா ஆனந்த் அவர்களின் மாணவிகள் , கிங்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நடன ஆசிரியர் திருமதி ஷாமினி கண்ணன் அவர்களின் மாணவிகள்  எழுச்சி நடனங்களை வழங்கினார்கள்.

அனைத்து உலக தொடர்பகத்தின் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்திய ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் ஒலிக்கப்பட்டு தமிழீழ தேசியக் கொடி மற்றும்  பிரித்தானிய தேசிய கொடி கையேந்தல் இடம்பெற்றது. ஈழம் கிடைக்கும் வரை பயணிப்போம் என்கின்ற உறுதியேற்போடு நிகழ்வானது நிறைவடைந்தது

 

 

Previous articleபேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடு
Next articleவீர வணக்க நிகழ்வு