நிகழ்வின் முதல் நிகழ்வா பொதுச்சுடரினை ஈஷ்டாம் தமிழ்க் கல்விகூட ஆசிரியை யசிந்தா ஜங்கரன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள் தமிழீழ தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிங்கிணைப்புக்குழு அரசியல் துறை பொறுப்பாளர் திரு நியூட்டன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள். ஈகைச்சுடரினை தமிழர் ஒருங்கிங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு அப்பன் செல்லையா அவர்கள் ஏற்றி வைத்தார்கள். அகவணக்கத்தினை தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு ஈஷ்டாம் தமிழ்க் கல்விகூட தலமை ஆசிரியை சுஜீவா ரவிசங்கர் அவர்கள் அணிவித்தார்கள். தொடர்ந்து மலர் வணக்கமும்தீபவணக்கமும் இடம்பெற்றது. நிகழ்வில் எழுச்சி நிகழ்வுகளை தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்கின்ற் பாடல் ஒலிக்கப்பட்டு தமிழீழ தேசியக்கொடி கையேந்தப்பட்டு தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.











