தியாக தீபம் திலீபனவர்களின் வணக்க நிகழ்வும் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமும்

302

தியாக தீபம் திலீபனவர்களின் 37 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது.

தமிழீழதின் மாவட்டம் எங்கும் திலீபனவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியானது மக்களின் மலர் தூவிய வணக்கத்துடன் யாழ் நல்லூரை வந்தடைந்து வணக்க நிகழ்வுகள் நிறைவுற்ற நிலையில் பிரித்தானிய பிரதமர் வதிவிடத்திற்க்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியக் கிளையின் ஒழுங்கமைப்பில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் இணைந்து திலீபனவர்களுக்கான நினைவேந்தல் அகம் அமைக்கப்பட்டு வெள்ளை கறுப்பு சீருடை அணிந்த மனித நேயப் பணியாளர்களின் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடை பெற்று வருகின்றது.

தேசியகொடிகள் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றி அக வணக்கத்துடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.  பி.ப5 மணி வரை நடைபெற்ற் நிகழ்வில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பழச் சாறு வழங்கப்பட்டதுடன், தேசிய கொடிகள் கையெந்தலுடன் எங்களுடைய கனவு நினைவாகும் வரை பயணிப்போம் என்கின்ற உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.

Previous articleதியாக தீபம் திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வு – லெஸ்டர்
Next articleதியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 23 வது ஆண்டு மற்றும் கேணல் கிட்டு பீரங்கி படையணியின் சிறப்பு தளபதி கேணல் ராயு அவர்களின் 22ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு