கார்த்திகையில் கருமேகமும் கசிந்து விழிசிந்தும் மாதம் வாரியடித்து வெள்ளமும் வான் பாயும், கார்த்திகைய்பில் பூமியும் மெய்சிலிர்த்து காத்திருக்கும் மண் கிழித்து மாவீரம் சொல்லும் நாள் பார்த்து.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 எக்ஷல் பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கமைப்பில் ஆரம்பமாகி உள்ளது.
நிகழ்வின் ஆரம்பமாக தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானியத் தேசியக் கொடிஇளையோர் அமைப்பு செல்வி பார்பரா ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டில் தமிழீழத் தேசியக் கொடியினை பிரித்தானியத் தமிழர் ஒருங்கமைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்த்து, வீரம் நிலை நாட்ட எதிரியை புறம் காட்ட உயிர் சாட்டையை எடுத்த உரிமைப் போரின் உத்தமர்கள் மானம் காத்த மாவீரர்ககளுக்கான கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.
ஈழத்தமிழர்கள் ஓர் தனித்துவமான ஓர் இனம்மென்ற தேசிய உணர்வை தமிழர் நெஞ்சில் தீ மூட்டி அடிமை விலங்கை உடைத்து சுதந்திரமான மனிதர்களாய் தரணியிலே பெருமையுடன் தலை நிமிர்ந்து நடக்க வழிகாட்டும் தலைவருடைய 2008 ம் ஆண்டின் உரையுடன் 12:37 நிமிடத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றும் நேரத்திற்க்காக லண்டன் எக்ஷல் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்.











