நவம்பர் 27 ……….மாவீரர் நாள்.
சாவிலும் மானம் பெரிதென்று சாற்றியநாள்.
உறக்கம் தொலைத்து தமிழ் மண்ணிற்காய் உயிரைக்கொடுத்த மாவீரர்கள் மாதம் .
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ம் ஆண்டின் ஈகை சுடரினை ஈகைச்சுடரினை தமிழீழத் தேசத்தின் எங்கள் தானைத்தலைவனின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம். ஈழப்படையணியின் போர்க்களம் பல கண்ட
புறநானூற்று வீரத் திருமகன் பிரிகேடியர் சொர்ணம்.
தலைவனைக் காத்து நின்ற காப்பரண். ஈழ மண்காத்து வீரமுடன் விதையாக வீழ்ந்த பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் புதல்வன் பிரபாநந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சுடர் ஏந்தி மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள்.














