தமிழர் விளையாட்டு விழா – ஸ்கொட்லாந்து

181

ஸ்கொட்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வினரால் நடாத்தப்பட்ட  தமிழர் விளையாட்டு விழா 9/06/2024
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல்
Hutcheson’s Grammar School
Beaton RoadGlasgow G41 4NW
மைதானத்தில் வெகு சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றது.

விளையாட்டு விழாவில்  பொதுச்சுடரினை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் சுரேஸ் அவர்கள் ஏற்றி வைக்க , அகவணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்து ஸ்கொட்லாந்து தேசியக்கொடியினை
கலை, பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் யமுனா அவர்களும்தமிழீழ தேசியக்கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் ஏற்றி வைத்து வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து மெய்வல்லுனர் விளையாட்டுச் சுடர் ஏற்றப்பட்டு விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள்
எமது தேசியக்கொடியின் அருகே ஏந்தி மைதானத்தை வலம் வர ராஜீ அவர்கள் மெய்வல்லுனர்
உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் யாவும் சிறப்பாக நடைபெற்று  வெற்றி சான்றிதழ்கள்,
பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்ஙகள்
வழங்கப்பட்டு கொடி கையேந்தல் நிகழ்வவோடு உறுதிமொழி எடுக்கப்பட்டு நிறைவு பெற்றது.

 

Previous articleதமிழர் விளையாட்டு விழா 2024
Next articleகலைஞர்களிக்கான மதிப்பளிப்பு